தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆகும் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை ஐசாரி கணேசன் அவர்கள் தயாரித்து உள்ளார்.
மேலும் இந்த திரைப்படமானது செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்துள்ளார் இன்று இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.
ஏற்கனவே நமது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு அவர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி என்பதன் காரணமாக இந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என பட குழுவினர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் செப்டம்பர் 16ஆம் தேதி வந்து தெரிந்தது காடு திரைப்படம் வெளிவந்த அடுத்த நாளே தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுவதால் அனைத்து திரையரங்கிலும் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வெறும் 75 ரூபாய் மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு நடக்கும் சம்பவத்தின் காரணமாக சிம்புவின் வசூலில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த நடைமுறைக்கு பல்வேறு தியேட்டர் உரிமையாளர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் அன்று தியேட்டரில் கும்பல் அதிக அளவு அலை மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் டிக்கெட் விலை ஒரு அடியாக குறைப்பதன் காரணமாக சிம்பு திரைப்படத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.