வெற்றிமாறனை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த திரைப்படம்.! வாழ்க்கையை மாற்றிய மூன்று படங்கள்

Vetrimaran

Vetrimaran : வித்தியாசமான படங்களை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தனுஷ் உடன் கைக்கோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற படங்கள் வெற்றி வெற்றி பெற்ற நிலையில் விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை படத்தை உருவாக்கினார்.

படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தள்ளத் தெளிவாக எடுத்துரைத்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனை தொடர்ந்து விடுதலை பார்ட் 2 திரைப்படம் அதிரடியாக உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி, சூரி ஆகியவர்களுடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்ற தகவலும் அண்மையில் உறுதியாக்கப்பட்டது. வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல், விஜய் உடன் ஒரு படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் வெற்றிமாறனுக்கு சினிமாவில் இயக்குனர் என்ற ஆசையை விதைத்த 3 படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் படம் எவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் படம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்த படத்தை மட்டுமே வெற்றிமாறன் சுமார் 47 முறை பார்த்திருக்கிறாராம்.  நாயகன் படம் தான் வெற்றிமாறனுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்ததாக கூறப்படுகிறது.

nayankan
nayankan

வெற்றிமாறனுக்கு அடுத்ததாக மிகப்பெரிய ஒரு தாக்கத்தை கொடுத்த படங்கள் என்றால் அழியாத கோலங்கள் மற்றும் டாக்டர் ராஜேந்திரன் டப்பிங் படமான மீசைக்காரன் போன்ற படங்கள் தான் திரும்பி திரும்பி பார்க்க தோன்றியதாக அமைந்ததாக கூறப்படுகிறது எல்லாம் வைத்துப் பார்க்கையில் ஒன்றே ஒன்று தான் புரிகிறது நம்முடைய முந்தைய தலைமுறையின்  படங்களை பார்த்து தான் இன்ஸ்பிரேஷன் ஆகி தற்போது இளம் இயக்குனர்கள் புதுப்புது படங்களை கொடுக்கின்றனர்.