இயக்குனர் நடிகருமான வென்றே அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உவமை டாக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது விஷால் நடித்து வரும் லத்தி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய் வைத்து மூன்று படங்கள் இயக்கிய வெங்கடேஷ் ரஜினி மற்றும் விஜய்யை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இயக்குனர் பவித்ரன் மற்றும் சங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி விட்டு சரத்குமார் நடித்திருந்த மகாபிரபு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் வெங்கடேஷ்.
அதன் பிறகு விஜய் நடித்த செல்வா, நிலாவே வா, பகவதி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதன் பின்னர் சூரியன் படத்தில் பவித்ரன் உடைய இயக்குனர் குழுவில் வெங்கடேஷ் அவர்களின் இயக்குனர் சங்கர் அவர்களும் இருந்துள்ளார்கள் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் பவித்ரனுக்கும் தயாரிப்பாளர் குஞ்சுமோனன் இடையே ஏதோ ஒரு மன வருத்தம் இருந்த போது இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது படம் தயாரிக்க புது இயக்குனர்களை தேடிய போது வெங்கடேஷ் அவர்கள் சங்கரிடம் ஜென்டில்மேன் கதையை தயாரிப்பாளர் குஞ்சுமோனன் அவர்களிடம் கூறுமாறு வலியுறுத்தியுள்ளாராம்.
இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த வெங்கடேஷ் அவர்கள் அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமானார். அதன் பிறகு கோலி சோடா, ஆண்டவன் கட்டளை, ஓ மை டாக் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் வெங்கடேஷ் மகாபிரபு திரைப்படத்தை எடுத்த பின்னர் தனது இரண்டாவது படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பகவதி கதையை ரஜினிகாந்திடம் அணுக முயன்று உள்ளார் அது நடக்காமல் போனதால் சரத்குமாரை வைத்து எடுக்கலாம் என்று முயற்சித்துள்ளார்.
ஆனால் பட்ஜெட் காரணமாக படம் தொடங்கவில்லையாம் அதன் பிறகு வேறொரு படங்களை இயக்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் ஷாஜகான் படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் விஜய் நடிக்க வைக்கலாம் என்று எண்ணி அதன் பிறகு விஜய் நடிக்க வைத்தாராம். ஆனால் பகவதி திரைப்படம் முதலில் ரஜினி அவர்களுக்காக எழுதியதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.