தயாரிப்பாளர் என்று கூறி கல்லுரி மாணவியை பலாத்காரம் செய்த நபர் கைது.! பரபரப்பு தகவல்…

Producer
Producer

பார்த்திபன் என்பவர் தன்னை ஒரு தயாரிப்பாளர் என கூறி நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த ஒரு கல்லூரி மாணவியை சீரழித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஒரு பெண் தன்னிடம் தயாரிப்பாளர் என்று சொல்லி தன்னை சீரழித்து விட்டதாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு  நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.

அந்த சமயத்தில் சினிமா வாய்ப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பேசினேன் அதில் கரூர் நல்லிபாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் ஒரு சினிமா பட தயாரிப்பாளர் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் தற்போது என்னுடைய படத்திற்கு ஒரு கதாநாயகியை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் கதாநாயகியை தேடிகொண்டிருக்கிறோம் அதனால் தன்னை பொள்ளாச்சியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்தார். நானும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையால் அங்கு சென்றேன். அங்கு இருந்த பாரதிபன் தன்னிடம் நல்ல விதமாக பேசி பின்னர் குளிர்பானம் கொடுத்தார் அதில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாமல் அதை குடித்தவுடன் மயங்கி விட்டேன்.

மயங்கி கிடந்த என்னை பார்த்திபன் சீரழித்து விட்டார் மயக்கம் தெரிந்தவுடன் என்னை அவர் திருமணம் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல் கதாநாயகியாக ஆக்குவதாகவும் கூறி என்னை சமாதானப்படுத்தினார் அதை நம்பிய அந்தப் பெண் வீடு திரும்பி இருக்கிறார். அதன் பிறகு பல நாட்களாக இதையே காரணமாக கூறி பலமுறை என்னை தனியாக அழைத்து தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதில் நான் கர்ப்பமானேன் அந்த விஷயத்தை பார்த்திபனிடம் கூறியுள்ளேன் அப்போது குழந்தை பிறந்து விட்டால் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாது எனக்கூறி குழந்தையை கலைக்க செய்தார். தொடர்ந்து பார்த்திபன் தன்னை ஏமாற்றியதை தெரிந்து கொண்ட நான் தற்போது காவல் நிலையத்தில் நாடியுள்ளேன் என இந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்து வந்த பார்த்திபன் கோவை  சரவணம்பட்டி கே புதூர் பாளையத்தில் அவர் வசித்து வந்த தகவலை அறிந்து கொண்ட போலீசார் விரைந்து பார்த்திபனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்த்திபனை கோவையில் உள்ள மாஜிஸ்திரேட் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் பார்த்திபனை கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.