உதவி செய்வது போல் நடித்து நடிகர் போண்டாமணியிடம் ஒரு லட்ச ரூபாயை ஆட்டைய போட்ட நபர் கைது.!

bonda-mani
bonda-mani

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் போண்டாமணி. இவர் சினிமாத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் பல இன்னல்களை சந்தித்து சினிமாவில் சாதித்தார் அது மட்டுமல்லாமல் நடிகர் வடிவேலுவுடன்  பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ரன், சுந்தரா ட்ராவல்ஸ், வின்னர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் வடிவேல் உடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் வடிவேல் உடன் நடித்து சினிமாவிலும் ஒரு இடத்தை பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதில் குறிப்பாக சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் வரும் வடிவேலு மற்றும் போண்டாமணி காட்சிகள் இன்று வரையிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அந்த அளவிற்கு அவர்களுடைய நகைச்சுவை அடங்கி இருக்கும். இந்த நிலையில் நடிகர் போண்டாமணி அவர்களுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் செய்ய பட்டது. நடிகர் போண்டாமணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுப்பிரமணியன், நடிகர் பார்த்திபன், வடிவேலு, தனுஷ், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி கடந்த 27ஆம் தேதி வீடு திரும்பினார்.

இதனிடையில் மருத்துவமனையில் இருக்கும் போது உதவி செய்வது போல நடித்து ராஜேஷ் என்கிற ப்ரீத்தி என்பவர் போண்டாமணி இடம் பழக்கத்தில் இருந்தார். அவருக்கு உதவி செய்வது போல கடைகளுக்கு சென்று வந்துள்ளார் அதை நம்பி போண்டாமணியின் மனைவி மாதவி மருந்து வாங்க அவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார்.

மருந்து வாங்கி வருவதாக சென்ற ராஜேஷ் ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு லட்சத்திற்கு நகை வாங்கியுள்ளார். நகை வாங்கியது மட்டுமல்லாமல் தலைமறைவாக ஆகிவிட்டார் இதனால் ஏமாந்து போன போண்டாமணியின் மனைவி மாதவி இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பெயரில் தீவிரமாக தேடி வந்த ராஜேஷை விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கி உள்ளதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.