மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் தற்பொழுது விமர்சகர் புளு சட்டை மாறன் இயக்குனர் மணிரத்தினத்தை பங்கமாக கலாய்த்திருக்கும் நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் வைரலாகி வருகிறது.
அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழர்களின் பெருமை, சோழர்கள் வரலாறு என போன்றவற்றை கண் முன் நிறுத்தி உள்ளார் மணிரத்தினம். மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை உருவாக்கிய நிலையில் தற்பொழுது இரண்டாவது பாகமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்ற முடிந்திருக்கும் நிலையில் அனைத்து பிரபலங்களும் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காமித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக நடைபெற்ற முடிந்த நிலையில் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தோண்டியது.
இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தினை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அதாவது வடிவேலு மீம்ஸ்சான கருப்புசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் காமெடி நடிகர் சாம்ஸை ஏமாற்றி பணம் பறிக்கும் வடிவேலு அதனை தன்னுடன் இருந்தவர்களுக்கு பங்கு போடுவார். அந்த இமேஜில் வடிவேலுக்கு பதிலாக மணிரத்தினம் அவருடன் விக்ரம், கார்த்தி ஆகியோர்கள் போட்டோவை வைத்து மீம்சை ஷேர் செய்துள்ளார்.
மேலும் அதில், இங்கு பாரு மணி, இந்த தடவை எல்லாம் தமிழர்களின் அழிக்க முடியாத பெருமை, மறைக்கப்பட்ட சோழனின் வரலாறு ,கடம்பூர் மாளிகை ரகசியம் தெரியுமா உனக்கு? அப்படி இப்படி என முட்டு தர முடியாது, படம் போர் அடிக்காம இருக்கணும் பாத்துக்கோ என என்ற ட்டூட் வெளியிட ரசிகர்கள் தொடர்ந்து மேலும் பல மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.