ஒருவழியாக பிக்பாஸ் வீட்டில் விளையாட போகும் 17 பேர் கொண்ட லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.! இணைய தளத்தில் பரவும் செய்தி.

big-boss
big-boss

சினிமா உலகைப் பொறுத்த வரை நடிகர் நடிகைகள் எப்படி மோதி கொள்கிறார்ளோ  அதுபோல வெள்ளித்திரை போட்டியாக தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது தான் சின்னத்திரை தொலைகாட்சி சமீபகாலமாக சின்னத்திரையில் தொலைக்காட்சிகள் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

அதிலும் குறிப்பாக காதல் ஜோடி, ரசிகர்களை தட்டி துவங்கியுள்ளது தொலைக்காட்சி அதிலும் விஜய் டிவி தொலைக்காட்சி சிறப்பான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை அவ்வப்போது கொடுப்பது மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் ஃபேவரிட் ஷோவாக தற்போது மாறியுள்ளது.

குறிப்பாக பிக்பாஸ் தற்போது நான்கு சீசன்களில் சிறப்பாக முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்ட சீசன் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்பட இருக்கிறது. பிக் பாஸ் தனது ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவற்றை வெளியிட்டாலும் போட்டியாளர்கள் யாரென்பதை மட்டும் சொல்லாமல் மறைமுகமாகவே வைத்திருந்தது ஆனால் மீடியா உலகமோ ஒரு சிலரை சரியாக கணித்து அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் 17 பேர் யார் என்பது தெரியாதவரை விழுந்து கொண்டிருந்தது.

மேலும் ஒரு சில ரசிகர்கள் தனக்கு பிடித்த பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொள்ளப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென நாம் எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் சில நடிகர் நடிகைகள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது. இப்படி இருக்கின்ற நிலையில் மொத்தம் 17 பேர் பிக் பாஸ் 5 வது சீசனில் கலந்து கொள்ளப் போவதாக கூறி ஒரு லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள மொத்த பெயர்கள். விஜய் டிவி பிரியங்கா, நாம் இருவர் நமக்கு இருவர் ராஜீ, நிழல்கள் ரவி, பிரியா ராமன், பவானி ரெட்டி, பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, ஷகிலாவின் மகள் மீலா, மாடலிங் நடிகை நதியா, நடிகை சூசன் ஜார்ஜ், கோபிநாத் ரவி, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், திரைப்பட விமர்சகர் அபிஷேக், நிரூப் நந்தா, நமிதா மாரிமுத்து, வருண் , இசைவாணி போன்றோர் பெயர்கள் இடம் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.