ரிலீசுக்கு முன்பே கல்லாப்பெட்டியை நிரப்பிய லியோ படம்.? ப்ரீ பிசினஸ் மட்டுமே இத்தனை கோடியா.?

vijay
vijay

ரஜினி, கமலுக்கு அடுத்து அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான்,  திரிஷா, பிரியா ஆனந்த் பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னை, இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீர் அடுத்ததாக  சூட்டிங் சென்னையில்  விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அதன் பிறகு   ஹைதராபாத் மற்றும் பல முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் லியோ டீம் தற்போதே ப்ரீ பிசினஸ் வேலைகளிலும் இறங்கி விட்டது.

வெளிநாட்டு உரிமம் 30 கோடிக்கு மேல் விற்று உள்ளது. கேரளாவில் 16 கோடியும் மற்றும் பல முக்கிய இடங்களிலும் பல கோடிக்கு விற்றுள்ளது. இதுவரை மட்டுமே லியோ டீம் ப்ரீ பிசினஸ்  மூலம் சுமார் 450 கோடிக்கு மேல் காசு பார்த்து உள்ளது இதனால் தயாரிப்பு நிறுவனம் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.

இதற்கு முன்பு வெளியான விஜயின் வாரிசு திரைப்படத்தின் பிரீ பிசினஸ் 300 கோடி தான் அதைவிட லியோ 150 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது.  படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று நல்ல காசு பார்க்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.