திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.. படவாய்ப்பும் இல்லை.. சீரியல் பக்கம் படையெடுக்கும் விஜய், தனுஷ் பட நடிகை.!

vijay-and-dhanush
vijay-and-dhanush

சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து ஆவது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் பிடித்திருந்தால் ஒன்றாக வாழ்வார்கள் இல்லை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட விவாகரத்து வாங்கி விடுவார்கள்.

அந்தவகையில் திருமணமாகி ஒரு வருடங்கள் கூட சேர்ந்து வாழாமல் விவாகரத்து வாங்கி கொண்டவர் தான் பிரபல நடிகை அமலாபால். இவர் பிரபல இயக்குனரான ஏஎல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் அமலாபால் சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது,ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவற்றை செய்து வந்ததால் ஏஎல் விஜய் அமலாபாலை விவாகரத்து செய்துவிட்டார்.

அமலாபால் மலையாளத்தின் மூலம் தான் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழில் சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய திரைப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து மைனா திரைப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல பெயரும், கதாநாயகி என்ற முத்திரையைப் பதித்தார்.

இவரின் நடிப்பு திறமையினால் தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு சமீப காலங்களாகவே திரைப்படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதன் பிறகு இவர் கடைசியாக நடித்திருந்த வெப் சீரியலில் பிட்டா காதல் இந்த சீரியலில் படம் ஆபாசமாக நடித்திருந்தால் தற்பொழுது வெப் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லையாம். இந்நிலையில் தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் நடிகையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

amala paul 01
amala paul 01

ஆனால் இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதனை அறிந்த அமலாபாலின் ரசிகர்கள் எப்படி இருந்த நீங்க இப்படி ஆய்டீங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.