என் படத்தில் சன்னிலியோன் ஆடனும் என ஒற்றைக்காலில் நிற்கும் முன்னணி தமிழ் நடிகர்.! ஆசை யாரை விட்டு வச்சிது…

sanni-leyone
sanni-leyone

தற்பொழுது 60 வயது தமிழ் நடிகர் ஒருவர் எனது படத்தில் சன்னி லியோன் தான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார். தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக இதைப் பற்றி தான் பேசுகிறார்கள்.

பாலிவுட்டில் மிகவும் பேமஸான மற்றும் ஹாட்டான நடிகை தான் சன்னி லியோன். இவர் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் மற்ற திரை உலகிலும் இவருக்கு என்று ரசிகர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள்.

பல நடிகர்கள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பிரபலமடைய செய்துள்ளார்கள்.அதில் சில வாரிசு நடிகர்கள் மட்டுமே இன்று வரையிலும் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் கார்த்திக்.

கார்த்திக் அவருடைய அப்பாவான பழம்பெரும் நடிகர் முத்துராமன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு இவரின் நடிப்பு திறமையால் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தார். இவர் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான 1980-90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு நவரச நாயகன் என்ற பட்டமும் பெற்றார். தற்பொழுது நடிகர் கார்த்திக் இவன் தீ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் திரைப்படத்தை இயக்கிய ஜெயமுருகன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வரிகளையும் இவரே எழுதியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து நடிகை சுகன்யா நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு  பொள்ளாச்சியில் 45 நாட்கள் சூட்டிங் முடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் சூட்டிங் நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் கார்த்திக் சன்னிலியோன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுனா இப்படத்தின் மார்க்கெட் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்று சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன்பே நடிகை சன்னி லியோன் நடிகர் ஜெய் நடித்த வடகறி திரை படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தி இருந்தார். இந்த பாட்டுக்காகவே இந்தப்படம் ஓடினது வேற ஒரு கதை என்று தான் கூற வேண்டும்.