தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. திரைஉலகில் ரஜினி, கமலை வசூல் மூலம் பின்னுக்கு தள்ளியவர் நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது என்பதே நிதர்சனமான உண்மை. இவர் 1985ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளிவந்த மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்தார்.
அடுத்து அவர் ஹலோ யார் பேசுவது, மருதாணி போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் திரை உலகில் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இப்படத்தினை பிரபல இயக்குனர் அன்பழகன் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக எங்க ஊரு பாட்டுக்காரன், கிராமத்து மின்னல், ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவல்காரன், காரகாட்டகாரன் என அடுத்தடுத்த பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
ராமராஜன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மேதை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து திரை உலகமே அதிர்ந்து போனது அந்த அளவிற்கு ராமராஜனுக்கு ரசிகர் உள்ளனர் என்பது மறைக்க முடியாத உண்மை.
தற்போது அவர் 19 ஆண்டுகள் கழித்து இயக்குனராக திரும்பவும் அமர உள்ளார் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க உள்ளாராம். இப்படத்தை தொடர்ந்து அவர் சில திரைப்படங்களை எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.