அருண் விஜய்க்கு ஜோடியாக ஆன்ட்டி நடிகையை அறிமுகப்படுத்தும் ஏ.எல்.விஜய்.!

arun-vijay
arun-vijay

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான நல்ல காரியம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்த அவர்தான் நடிகர் அருண் விஜய். அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் யானை.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சினம்,பார்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் வாணி போஜன் உடன் இணைந்து வெப் சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஏ.எல். விஜய் அவர்கள் இயக்கம் இருக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் ஏ எல் விஜய் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் இவருடைய இயக்கத்தில் கடைசியாக தலைவி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றிருந்தது இந்நிலையில் தற்பொழுது முதன்முறையாக அருண் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் இயக்க இருக்கிறார்.

இவ்வாறு முதன்முறையாக இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எமி ஜாக்சன் இதற்கு முன்பே தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் கடைசியாக இவர் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருக்கு திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் அதனையெல்லாம் மறுத்துவிட்டு தன்னுடைய சொந்த ஊரான லண்டனுக்கு சென்று விட்டார்.

பிறகு தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு சில நாட்கள் கழித்து விவாகரத்தை பெற்றார் இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் வேறு ஒருவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.