முரளி நிராகரித்த படத்தில் விஜய் நடித்து மாபெரும் ஹிட்டடித்த கதை தெரியுமா.!

vijay-3
vijay-3

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக ஜொலித்துவரும் விஜய் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். பிறகு ஒரு கட்டத்தில் தானாக பட வாய்ப்புகளை பெற்று நடிக்க தொடங்கினார்.

அப்படி விஜய்யின் சினிமா கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் பூவே உனக்காக. 1996ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஒரு தலை காதலை மையமாக வைத்து உருவாகி இருந்தது எனவே அப்பொழுது இருந்த இளசுகளின் மத்தியில் மிக பெரிய வரவேற்பினை பெற்றது. மேலும் வசனங்களும் பிரபலமான நிலையில் மிகவும் முக்கியமாக, காதல் என்பது பூ மாதிரி ஒரு தடவை பூ உதிர்ந்தால் மறுபடியும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது என விஜய் பேசி இருப்பார்.

இவ்வாறு ட்ரெண்டிங்கான இந்த வசனத்தை அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம் என அந்தக் கேள்விக்கு பதில் கூறும் வகையில் வாரிசு படத்தில் வசனம் வைத்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் விஜய்க்கு பூவே உனக்காக திரைப்படம் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது.

இவ்வாறு இந்த வெற்றி திரைப்படத்தில் முதலில் விஜய்க்கு பதில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த நடிகர் வேண்டாம் என நிராகரிக்க பிறகு இந்த கதை விஜய்க்கு பிடித்து போனதால் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆம், அதாவது முதலில் நடிகர் முரளி தான் நடிக்க இருந்தாராம் ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிட பிறகு தான் விஜய்யை நடிக்க வைத்திருக்கிறார் விக்ரமன். இவ்வாறு இந்த படத்தில் விஜய் நடித்து மிகப்பெரிய ஹிட்டான நிலையில் விஜய்யின் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.