தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும் வெவ்வேறு பாதையை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் நடிப்பதாக இருந்து பின்னர் கமல் நடித்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்..
1980 ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான திரைப்படம் குரு. ஐ வி சசி இயக்கியிருந்தார். படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது ஆனால் குரு திரைப்படத்தில் முதலில் நடிக்க இயக்குனர் சசி முதலில் அணுகியது ரஜினியை தானாம். ஆனால் ரஜினியின் கால்ஷீட் அப்பொழுது கிடைக்காததால் கமல் இந்த படத்தில் நடித்தாராம்.
இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டமான இந்தியன் கதையை முதலில் ரஜினியிடம் தான் சொன்னாராம் ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பிறகு கமலை வைத்து இந்த படத்தை எடுத்தார் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் இன்று அளவும் இந்த படத்தை பற்றி பேசி வருகின்றனர்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான த்ரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ரஜினிக்கு இந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தாலும் தன்னுடைய இமேஜ்க்கு அது சரியாக வராது என நினைத்த காரணத்தினால் அந்த படத்தில் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக கமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று படங்களில் குரு திரைப்படம் தமிழகத்தில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது இந்தியன் வசூலில் சாதனை படைத்ததை நாம் சொல்லி தான் தெரிய வேண்டியது அல்ல.. ஆனால் பாபநாசம் படம் பலரது மத்தியிலும் நல்ல கவனத்தை ஈர்த்தாலும் பெருமளவு வசூல் வேட்டை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.