எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை மோனிஷா கின்னஸ் சாதனை படைத்திருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பாராட்டு வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் விறுவிறுப்பான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வருகிறார் இவ்வாறு இந்த அளவிற்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை நடைபெறுவதற்கு அதன் கதைகளும் தான் காரணம்.
அதாவது படித்த பெண்களை திருமணம் செய்துக்கொண்ட நான்கு மருமகள்களையும் படாத பாடு படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அவரது மகளாக தர்ஷினி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் மோனிஷா இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அதாவது நடிகை மோனிஷா கோகுல் நடத்தும் யூனிட் டேலண்ட் அகாடமி என்கின்ற பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரின் தங்கையும் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளாராம். இந்தியாவிலேயே கின்னஸ் சாதனை படைத்த முதல் இரண்டு சகோதரிகள் என கூறப்படுகிறது. நடிகை மோனிஷா poi weaves எனப்படும் பந்தை கயிற்றில் கட்டி சுற்றும் போட்டியில் ஒரு நிமிடத்தில் 80 முறை சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் சிலம்பத்திலும் சிறந்து விளங்கும் மோனிஷா சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கு பெற்று தங்க பதக்கத்தையும் வென்றிருக்கிறார். மேலும் ஹார்ஸ் ரைடிங், ஜிம்நாஸ்டிக், மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங் என பல திறமைகளை வைத்திருக்கும் இவரை ரசிகர்கள் இவ்வளவு திறமையானவரா என ஆச்சரியப்பட்டு பாராட்டி வருகிறார்கள்.