A green yolk egg that goes viral on social networks.:கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒத்துக்குங்கல் நகரை சேர்ந்த நபர் ஒருவரின் கோழி பண்ணையில் 6 கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகள் இட்டு வருகின்றன.
இதற்கு முன் சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் ஷிகாபுதின் கோழிப்பண்ணையில் இதுபோன்று கோழி ஒன்று பச்சை மஞ்சள் கரு இருப்பதைப் பார்த்ததும் தீங்கு விளைவிக்கும் என்று பயந்து அவர்கள் யாரும் அதை சாப்பிடவில்லை. இந்நிலையில் இந்த சந்தேகத்தை போக்க கோழிகள் இட்ட முட்டைகளை அடைகாக்க வைத்து குஞ்சு பொரிக்க செய்தனர். அந்த கோழிகளும் பச்சை கரு முட்டையை இட்டது.
இந்த முட்டை குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதனைதொடர்ந்து பலர் அவரை அந்த பச்சல் கருமுட்டைக்காக அணுகினர். பின்னர்தான் அந்த முட்டைகளை கொஞ்சி பொரிப்பதற்காக வைத்திருக்கிறேன் என்று கூறினாராம்.
இது குறித்து பேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கோழிகள் ஏதேனும் வித்தியாசமான தீவனங்களை சாப்பிட்டதால் இதுபோன்ற பச்சை மஞ்சள் கரு முட்டையிடுவதற்கு வாய்ப்பிருக்கு என்று கூறினார்கள். ஆனால் அதன் உரிமையாளர் தான் எந்த ஒரு வித்தியாசமான தீவனமும் கொடுக்கவல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த பச்சை முட்டைக்கு பின்னணி உள்ள ரகசியத்தை கண்டறிய மூன்று வாரங்கள் தேவைப்படும் என பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் இந்தக் கோழிகளை பல்கலைக் வேதத்தில் வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் வைத்து வளர்க்கும் போது கோழிகள் மூன்று வாரத்திற்கு பிறகு மஞ்சள் கரு முட்டை இட்டாள் பண்ணையில் வித்தியாசமான தீவனங்கள் வழங்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படும். அப்படி இல்லை என்றால் மூன்று வாரங்களுக்குப் பிறகும் பச்சை கருமுட்டை இட்டால் இந்த நிகழ்வின் பின்னால் இருக்கும் சரியான காரணங்களை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.