90 காலகட்டங்களிலிருந்து இப்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவில் படங்களை இயக்கியும், நடித்தும் வலம் வருபவர் கே எஸ் ரவிகுமார். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி கமல் சரத்குமார் போன்ற டாப் நடிகர்களை வைத்து சிறந்த படங்களை இயக்கிய அவர்களை தூக்கி விட்டவர்.
இவர்களை தொடர்ந்து அடுத்த லெவலில் இருந்த அஜித்துக்கும் அதிக வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது ஆனால் தளபதி விஜயுடன் மட்டும் கே எஸ் ரவிக்குமார் இணையவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஒரே ஒருமுறை மட்டும் விஜயுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் அந்த படம் வேறு எதுவுமல்ல 1999 ஆம் ஆண்டில் வெளியான மின்சார கண்ணா என்ற படத்தை இயக்கியது தான் அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை ஆனால் விஜய்க்காக பல வருடங்களாகக் காத்துக் கொண்டுதான் இருக்கிறார் என கேஎஸ் ரவிக்குமார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது நான் விஜய்யை வைத்து படங்களை இயக்க ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. ஆனால் அவருடன் படம் பண்ண நான் ரெடியாக தான் இருக்கிறேன் விஜய் என்னைக் கூப்பிட்டால் போதும் படம் ரெடியாக இருக்கிறது என கூறினார் ரஜினிக்கு எப்படி பிளாக்பஸ்டர் படத்தை படையப்பா கொடுத்ததோ அதே போன்ற ஒரு கதையை விஜய்க்காக நான் வைத்திருக்கிறேன் என அவர் கூறினார்.
அண்மைகாலமாக தளபதி விஜய் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார் அப்படியிருக்கும் விஜய் படையப்பா போன்ற ஒரு படத்தில் நடிப்பாரா என்பது ஒரு கேள்விக்குறிதான் அதேசமயம் இளம் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பை கொடுக்கிறார் விஜய் அப்படி இருக்கையிலும் கே எஸ் ரவிகுமார் உடன் இணைவது சந்தேகமாகத்தான் இருந்து வருகிறது