வசூலில் படிப்படியாக குறையும் வெந்து தணிந்தது காடு.? சிம்புவுக்கு வெற்றியா.? தோல்வியா.? இதோ நான்காவது நாள் வசூல் ரிப்போர்ட்.!

vendhu-thaninthathu-kaadu
vendhu-thaninthathu-kaadu

தமிழ் சினிமாவில் மூன்றாவது முறையாக சிம்பு கௌதமேனன் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாக்கிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்தத் திரைப்படம் கடந்த வாரம் 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுடைய மட்டுமல்லாமல் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது அது மட்டும் இல்லாமல் முதல் நாள் நல்ல வசூலை ஈட்டியது.

அதுமட்டுமில்லாமல் சிம்புவிற்கு இதுவரை வந்த திரைப்படங்களிலேயே நல்ல ஓபனிங் கொடுத்த திரைப்படமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்துள்ளது. இதற்கு முன் கௌதமேனன்  இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களில் மாஸ் காட்டிய சிம்பு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இணைந்தார்.

முதலில் இந்த திரைப்படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது அதன் பிறகு தான் வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைக்கப்பட்டு கேங்ஸ்டர் திரைப்படமாக மாறியது. சிம்பு இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் கொழுக்கு முழுக்க என்று குண்டாக இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் சின்ன பையன் போன்று கேங்க்ஸ்டார் ஆக மாறியது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகிய ட்ரெய்லர் மட்டும் டீசர் பாடலை அனைத்தும் ஹிட்டாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது அது மட்டும் இல்லாமல் படம் வெளியாகி முதல் வாரத்தில் தரமான ஒப்பனிங் கிடைத்ததால் சிம்பு கேரியரில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சிறப்பான திரைப்படமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முத்து பாய் அவரது நடிப்பும் பக்குவமான நடிப்பு என அனைத்தும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில். 15ஆம் தேதி வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் முதல் நாளில் இருந்து நல்ல வசூல் செய்து வருகிறது படத்தையும் படத்தின் மேக்கிங்கும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள் இந்த திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இரண்டாவது நாளில் எட்டு கோடி வசூலும் மூன்றாவது நாளில் 7 கோடி வசூலும் செய்து இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது நான்காவது நாள் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது நான்காவது நாளில் 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மூன்று நாட்களில் 27 கோடி வரை வெந்து தணிந்தது காடு முதல் வாரம் உலகம் முழுவதும் 35 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால் இந்த பாக்ஸ் ஆபிஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை படக்குழு எதுவும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது