ரஜினியினால் தனுஷ்க்கு நடந்த நல்லது.. என்ன தெரியுமா.?

dhanush
dhanush

Dhanush – Rajini: ரஜினியின் நண்பரான சிவராஜ் குமாரால் தனுஷுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 10ம் தேதி அன்று வெளியான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்று பார்த்து வரும் நிலையில் ஜெய்லர் படத்தின்  வசூலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. பாசிடிவ் விமர்சனங்களோடு ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படம் கண்டிப்பாக ரூபாய் 800 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினியை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, விநாயகான், வசந்த் ரவி, சரவணன், அறந்தாங்கி நிஷா, மாரிமுத்து, மகாநதி சங்கர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.இதனை அடுத்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர்களும் நடித்துள்ளனர்.

அப்படி ஜெயிலர் படத்தில் கமிட்டாக பொழுதே சிவராஜ்குமார் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திலும் கமிட்டானார். ஜெயிலர் போல இல்லாம கடந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் நடித்துள்ளார். தனுஷ்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது ஜெயிலர் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இவருடைய கேரக்டரும் இடம் பெற்றுள்ளது.

ஆனால் கேப்டன் மில்லர் படத்தில் வேறு மாதிரியான சம்பவத்தை செய்துள்ளார் அப்படி இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் நிலையில் சிவராஜ்குமார் சில மாஸ் சீன்களில் நடித்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜெயிலர் வரும் வரை தனுஷ்காக கேப்டன் மில்லரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இப்பொழுது சிவ ராஜ்குமாருக்காகவும் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர் எனவே எப்படியோ ரஜினியினால் தனுசுக்கு நல்லது நடக்கிறது.