தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலுக்கும் பொதுவாக மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 20 ஆண்டு காலங்களாக தொடர்ந்து வெற்றிகரமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் சன் டிவி டிஆர்பியில் கொடிகட்டி பறந்து வருகிறது.
மேலும் அனைத்து முன்னணியின் தொலைக்காட்சிகளுக்கும் டப் கொடுத்து வரும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், இனியா, எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இவ்வாறு காலை முதல் இரவு வரை தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்த வருகிறது இந்நிலையில் திடீரென முக்கிய சீரியல் ஒன்று முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வரும் திங்கள் (ஜூன் 26) முதல் புது வசந்தம் என்ற புத்தம் புதிய சீரியல் அறிமுகமாக உள்ளது. இந்த சீரியலில் செம்பருத்தி, அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ஷாம் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இது குறித்த ப்ரோமோவும் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த சீரியல் மதியம் 1:30 மணி அளவில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனால் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வரப் போகிறதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் முடிவுக்கு வருவது தாலாட்டு சீரியல்தான்.
இதனால் வரும் திங்கள் முதல் பாண்டவர் இல்லம் சீரியல் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை அடுத்து புதிதாக அறிமுகமாக இருக்கும் புது வசந்தம் சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.