நல்ல கதை களத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் காணாத அளவிற்கு புதிய தரத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்து கொடுப்பதால் ராஜமௌலியின் ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகின்றன அந்தவகையில் பாகுபலி பாகுபலி 2.. இப்போ RRR என இவரது திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுகின்றன.
கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி உள்ளது குறிப்பாக RRR வசூலில் 1000 கோடியைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமான நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
அந்த வகையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், பிரபாஸ் ஆகியோரை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்ட நிலையில் மகேஷ்பாபுவுடன் மட்டும் இணையாமல் இருந்தார் தற்போது அதையும் நிறைவேற்ற உள்ளார் ரசிகர்களின் கவலையை தீர்க்கும் வகையில் மகேஷ்பாபுவுக்கு ஒரு கதையை சொல்லி அடுத்த படத்தை ராஜமவுலி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் ராஜமௌலி மகேஷ்பாபு படத்திற்கான கதைகளும் எப்படி உருவானது என்பது குறித்து பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். கொரோனா தாக்கம் துவங்கிய பின்னர் வெளியில் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த சமயத்தில் என் தந்தை விஜயேந்திர பிரசாத் வீட்டில் பொழுதை வசதியாக கழித்து விடக் கூடாது என கூறினார்.
அந்த சமயத்தில் பலவிதமான ஐடியாக்களை பேசிப்பேசி மகேஷ்பாபு படத்திற்கான இரண்டு விதமான கதைகளை பிடித்தோம் இரண்டுமே மிக பிரம்மாண்டமான பட்ஜெட் கேட்கும் கதைகள் தான் அதே சமயம் மகேஷ்பாபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் கதைகள் கூறினார்.