சினிமாவை பொறுத்தவரை ஒரு இயக்குனர் ஒரு நடிகர் நினைத்து கதையை எழுதி வைத்திருப்பார் ஆனால் அந்த கதையின் வேறொரு நடிகர் நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்களும் இருக்கிறது அதேபோல தோல்வி அடைந்த திரைப்படங்களும் இருக்கிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் மாதவனுக்காக எழுதப்பட்ட கதையில் அஜித்தை நடிக்க வைத்து ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டார். இதனால் அந்த இயக்குனர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது இயக்குனர் லிங்குசாமி அவர்கள் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஜி இந்தத் திரைப்படத்தின் கதை முழுக்க மாதவனுக்காக தான் முதலில் எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாதவனை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் லிங்குசாமிக்கு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த நேரத்தில் மாதவனுக்காக எழுதப்பட்டிருந்த கதையை அஜித்திடம் கூறியிருக்கிறார். இந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதால் இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று முன் வந்திருக்கிறார் நடிகர் அஜித்.
ஒரு முன்னணி நடிகரே தன்னுடைய படத்தில் நடிக்க முன் வருகிறார் என்றதும் வேறு வழி இல்லாமல் லிங்குசாமி இந்த படத்தை அஜித்தை வைத்து இயக்கினார். ஏற்கனவே இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் ரஜினிக்கும் இந்த கதை பிடித்திருக்கிறது என்று அவரே கூறியுள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் மாதவனுக்காக எழுதப்பட்ட கதையில் அஜித் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்து இருக்கிறது ஏனென்றால் நடிகர் அஜித் அவர்கள் இந்த படத்திற்காக கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார் ஆனால் அதை செய்யவே இல்லையாம் அஜித்.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கொஞ்சம் மீசை தாடி உடன் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார் ஆனால் அஜித் முழுமையாக வழித்து விட்டு வைத்திருக்கிறார். அதன் பிறகு அந்த காட்ச்சியில் ஒட்டு மீசை தாடி வைத்து நடித்தாராம். இதனால் இந்த படத்தில் ஏண்டா அஜித்தை நடிக்க வைத்தோம் என்று புலம்பி வருகிறாராம் இயக்குனர் லிங்குசாமி. இந்த தகவல்கள் தற்போது சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.