Jason Sanjay : சினிமா உலகில் வெற்றி கண்ட நடிகர், நடிகைகளை தொடர்ந்து அவருடைய வாரிசுகளும் சினிமா உலகில் ஜொலிக்கின்றனர் அந்த வகையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் வந்தார். திடீரென லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இயக்குனராகுவதற்கு பின்னால் பெரிய ஒரு வேலையை நடக்கிறது. லைகா நிறுவனத்தின் தலைவரும் சங்கீதா விஜயின் தந்தை இருவருமே நெருங்கிய நண்பர்களாம். அவர்தான் தன்னுடைய பேரனுக்கு வாய்ப்பு கொடு மொத்த செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் இப்பொழுது தான் ஒன் லைன் கதையை சொல்லி அதை கதையாக எழுதி வருகிறார். அவருக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லாததால் அனுபவம் வாய்ந்த சிலரை இணைந்து அவருடன் வேலை பார்த்து வருகிறதாம். அந்த பணிகள் முடிந்த பிறகு கதையைக் காண நடிகர் நடிகைகளை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளாராம்.
இருப்பினும் ஹீரோவை முன்கூட்டியே புக் செய்தால் மட்டுமே அவர் சூட்டிங் போது கரெக்டாக வர முடியும் என்று கருதி உள்ளார் இதில் அதர்வா, கவின் மற்றும் ஒரு சில இளம் நடிகர்கள் இருக்கின்றனர். பெரிய நடிகர்களை வைத்து புக் செய்து படம் ஊத்திக் கொண்டால் பெரிய நஷ்டம் ஆகிவிடும் மேலும் அது லைககாவுக்கு ஒரு கெட்ட பெயராகவும் அமைந்துவிடும் .
இதனால் இளம் நடிகர்களை வைத்து பெரிய வெற்றி கண்டால் அது ஜேசன் சஞ்சய்க்கும் நல்ல பெயர் லைகாவுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்தினால் தான் இளம் நடிகர்களை தேர்வு செய்துள்ளது அந்த லிஸ்டில் கவின் கடைசியாக நடித்த டாடா படம் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ஜேசன் சஞ்சய் படத்தில் கவின் நடிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.