துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் புல்லட் போல் செதரவிடும் படக்குழு.! வெளியாகிய துணிவு மாஸ் அப்டேட்…

thunivu
thunivu

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வரும் திரைப்படம் துணிவு இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் சில்லா சில்லா என்று தொடங்க உள்ள இந்த பாடலை அனிருத் அவர்கள் பாடியுள்ளார்.

துணிவு திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறதாம் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது அவருடன் கைகோர்த்து மஞ்சு வாரியார் சமுத்திரகனி யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் நடித்த பிக் பாஸ் நடிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மமதி அவர்கள் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சில தகவல்களை ஒரு பேட்டியில் கூறி இருந்தார் அதாவது துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் தான் நான் நடித்திருக்கிறேன் அந்த காட்சியில் என்னுடைய முழு மனசோடு நான் நடித்திருக்கிறேன் அது மட்டுமல்லாமல் அந்த சிறு காட்சியிலும் நான் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

துணிவு படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகும் என படக் குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சில்லா சில்லா என்று தொடங்கும் இந்த பாடலை ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் அனிருத் அவர்கள் பாடியுள்ளார் மேலும் சில்லா சில்லா என்று தொடங்கும்  சிங்கிள் சாங் அஜித்தின் இன்றோ சாங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக உள்ளதாம். அதுமட்டுமல்லாமல் அஜித்தின் வியாழன் கிழமை சென்டிமென்ட் துணிவு பஸ்ட் சிங்கிளிலும் தொடர்கிறது.