சண்டைனா சட்டை கிழிய தான் செய்யும்.. சந்திரசேகருக்கும், விஜய்க்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தர தரவென இழுத்துச் சென்ற அப்பா.. பயந்துப்போன உதவி இயக்குனர்கள்

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது திரையுலகில்  பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஆரம்பத்தில் இவரை சினிமா உலகில் வளர்த்து விட்டது அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான்.. ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவரும் பெரிய அளவில் பேசிக்கொள்ளவில்லை..

இருவருக்கும் இடையேயான பல வதந்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது இப்படி இருந்தாலும் விஜயின் பட விழா, இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா போன்றவற்றில்  முதல் ஆளாக எஸ் ஏ சந்திரசேகர் தான் கலந்து கொள்கிறார் வைத்து பார்த்தால் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் – விஜய் பற்றி பிரமாண்ட இயக்குனர் சங்கர் சில வருடங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. ஒரு சமயத்தில் எஸ். ஏ. சந்திரசேகரின் வீட்டில் தான் அலுவலகம் இருந்தது. இதனால் உதவி இயக்குனர்கள் அனைவரும்  அங்கு தான் செல்வோம்..

அப்படி ஒரு நாள் அங்கு நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் பயங்கர சத்தம் இருந்தது அப்பாவும், மகனும் மாறி மாறி கத்தி கொண்டார்கள் திடீரென விஜயை படிக்கட்டில் இருந்து இழுத்து சென்றார் எஸ். ஏ. சந்திரசேகர் இதை பார்த்த உதவியக்குனர்கள் ஷாக் ஆகிவிட்டனர். உடனே உதவி இயக்குனர் பக்கத்தில் வந்தார்.

சார் என்ன பிரச்சனை என உதவி இயக்குனர்கள் கேட்க ஒன்னும் இல்ல ஊசி போட வர மறுத்து விட்டான். ஓவராக அடம் பிடித்ததால் அவனை காரில் இழுத்துச் சென்று அமர வைத்தேன் என கூறி இருக்கிறார். இதைப் பார்த்த உதவி இயக்குனர் ஊசி போட வராததற்கு இப்படியா பண்றது எனக்கூறி ஷாக் ஆகிவிட்டனராம் இந்த தகவலை ஷங்கர் பேட்டியில் கூறியிருந்தார்.