எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்யாத சாதனை..? சாதித்து காட்டிய நடிகர் யோகி பாபு.! வியப்பில் ரசிகர்கள்.!

yogi-babu
yogi-babu

நடிகர் யோகி பாபு முதலில் சின்னத்திரையில் பணியாற்றினார் அதன்பின் வெள்ளித்திரை பக்கம் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் தான் சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்கின்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்தது அதனால் துறுதுறுவென இருந்து கொண்டே இருந்தார்.

அதை கண்டுபிடித்த இயக்குனர்கள் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பைக் கொடுத்தனர். அதை சரியாக பயன்படுத்தி தனது திறமையை காட்டினார் யோகி பாபு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் இவருக்காகவே படங்கள் எல்லாம் ஹிட் அடித்தன. இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து..

தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார். மேலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை யோகி பாபு உருவாகி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இவர் சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். தன்னை நம்பி வருகின்ற காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

தற்பொழுது கூட விஜயின் வாரிசு என ஏகப்பட்ட படங்களில் யோகி பாபு நடித்து வருகிறார் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக இருக்கும் யோகி பாபு ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் பட வாய்ப்பை கைப்பற்றி வருகின்றனர்.

இருப்பினும் அவர்களை விட ஒரு படி முன்னேறி புதிய சாதனை செய்துள்ளார். யோகி பாபு தற்போது கமிட்டாகி நடித்து வரும் திரைப்படங்கள் மட்டுமே சுமார் 39 படங்கள் என தகவல் வெளியாகி உள்ளது இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லையாம்..