படம் வெளியாவதற்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள தவறை சுட்டி காட்டிய ரசிகர்…

ponniyin-selvan
ponniyin-selvan

பொன்னியன் செல்வன் படத்தில் உள்ள ஒரு தவறை சுட்டிக்காட்டிய இலங்கை ரசிகர் இதனால் ஏற்பட்ட பரபரப்பு.

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இன்நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக முன்பதிவு தொடங்கிய நிலையில் முன்பதிவில் மட்டுமே பொன்னியின் செல்வன் சாதனை வாசல் செய்துள்ளது என்று தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ்க்கு பின்னர் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை தமிழ் ரசிகர் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒரு தவறை கண்டுபிடித்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் கரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் ஹிந்தி ட்ரெய்லரில் சிங்கள நாடு என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா என்று மாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் என்றும் இலங்கை தமிழர் ஆனால் தான் தற்போது  இந்த தவறை சரி செய்யும்மாறு கேட்டு கொள்வதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் வாழும் இலங்கை என்பது சிங்களர்களின் நாடு என்பதை குறிக்கும் வகையில் சிங்கள நாடு என குறிப்பிட்டுள்ளதால் தான் மிகவும் மன வருத்தம் அடைகிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.