நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு திரைப்படம் எதிர்பாராத விதமாக மோதி உள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும் விஜயின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது ஆனால் ரசிகர்கள் அதற்கு முன்பாக ஏழு எட்டு மணிக்கு கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்
இரண்டு ரசிகர்களும் நன்றாக கொண்டாடினாலும் ஒரு சில திரையரங்குகளில் சண்டைகள் சச்சரவுகள் ஏற்பட்டது இதனால் அஜித் விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. போலீஸ் என்னதான் கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்தனர் இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது மிகப்பெரிய ஒரு சம்பவம் நடந்துள்ளது.
துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர் பரத் குமார் என்பவர் மெதுவாக வந்து கொண்டு இருந்த லாரி மீது ஏறி நடனம் ஆடிக் கொண்டிருந்தார் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இந்த தகவல் அஜித் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த செய்தி அஜித்தையும் தற்போது தூங்கவிடவில்லையாம் ஏனென்றால் அஜித் எனது ரசிகர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என நினைப்பவர் அப்படி இருக்கயில் ஒரு ரசிகர் உயிரிழந்தது அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது இதனால் தான் ஏற்கனவே ரசிகர்கள் மன்றத்தை கலைத்து அவரவர் அவர்களது வேலையை பார்க்க வேண்டும்.
படம் பிடித்திருந்தால் பார்க்க வாருங்கள் பேனர் கட்அவுட் எல்லாம் வைக்காதீர்கள் என சொன்னார் இருப்பினும் அஜித்தின் மீது இருந்த பாசத்தால் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் பேனர் என வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லை இது போன்ற செயல்கள் செய்வது ரொம்ப தவறு இது அஜித்தை ரொம்ப வருத்தத்தில் உள்ளாக்கி உள்ளது.