தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து வெற்றி மேல் வெற்றியை ருசித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் அண்மையில் நடித்த டான், டாக்டர் போன்ற இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது.
அதனால் அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் சந்தோஷமாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தற்போது சிவக்கார்த்திகேயன் கையில் பிரின்ஸ், அயாலன், மாவீரன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரேம்ஜி அமரன், சத்தியராஜ், மரியா மற்றும் பல பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரின்ஸ் படம் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது பிரண்ட்ஸ் திரைப்படத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படத்தை கைப்பற்றி உள்ளது அந்த நிறுவனம் வேறு எதுவும் அல்ல.. ஸ்டார் குரூப் நிறுவனம் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒரு தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் தற்பொழுது படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்.
மேலும் சிவகார்த்திகேயனும் சந்தோஷத்தில் இருந்து வருகிறார் படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடிகளை பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் அதிரடியாக உருவாகி வருகிறது அந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.