பொதுவாக விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருக்கிறது மேலும் அனைத்து பிரபலங்களும் விஜயுடன் ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது தமிழில் பிரபல நடிகர் ஒருவர் விஜயுடன் அந்த படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டால் அதில் சம்பளம் இல்லாமல் நடிக்க நான் தயார் என அவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரைவுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனர் ஆர்பி சௌந்தரி பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளார் மேலும் தொடர்ந்து ஏராளமான படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏராளமான விஜய் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் நூறாவது படத்தில் அவர் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்காக சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌந்தரியை சமீபத்தில் விஜய் சந்தித்ததாகவும் அந்நிறுவனத்தின் நூறாவது படத்தின் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆர்பி சௌந்தரி மகனும் நடிகருமான ஜீவா கூறியுள்ளார். இவ்வாறு இது குறித்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படத்தில் விஜய் நடிப்பது உறுதியானால் அந்த படத்தில் நான் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுப்பதாக தன்னுடைய அப்பாவிடம் ஜீவா கூறியுள்ளாராம்.
எனவே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படத்தில் விஜய் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்பொழுது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தினை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கருக்கும் படத்தில் இனிய இருக்கிறார் இந்த திரைப்படத்திற்காக இவர்கள் இணைந்து பேசிக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது மேலும் இது குறித்து லோகேஷ் கனகராஜ் தற்பொழுது நல்ல கதையம்சமுள்ள திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத.