தன்னுடைய சொந்த ஊரில் பெரிய பங்களாவை கட்ட இருக்கும் பிரபல சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும்..

neelima-rani-2
neelima-rani-2

வெள்ளித்திரையில் பிரபலமடைந்து பிறகு சின்னத்திரையிலும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்பொழுது தொடர்ந்து பல வெற்றி சீரியல்களை இயக்கி வரும் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய சொந்த ஊரில் பங்களா ஒன்று கட்ட இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது எனவே ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் பெற்ற தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நீலிமா ராணி. இந்த படத்தினை தொடர்ந்து சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மேலும் இன்னும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து அதன் பிறகு தான் இவருக்கு சில சீரியல்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது எனவே சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த இவர் தொடர்ந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் தம், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

neelima rani 1
neelima rani 1

சமீப காலங்களாக இவருக்கு வெள்ளி திரையில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னதிரையில் ஹீரோயின் ஆகவும், வெள்ளி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வந்தார். அதன் பிறகு தன்னுடைய இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

neelima rani
neelima rani

இந்நிலையில் சமீப காலங்களாக சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியல்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய கணவர் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் புதிய வீடு கட்டுவதற்காக பூமி பூஜை போடும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் இவருடைய சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் ஒரத்தநாடு கிராமத்தில் பங்களா ஒன்றைக் கட்ட முடிவெடுத்துள்ளார் அதற்கான பூமி பூஜை செய்தவர்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.