சமீப காலங்களாக சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் மிகவும் சிம்பிளாக தன்னுடைய கணவருடன் வளைகாப்பை நடத்தி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
அதாவது தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அனு இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டவர் இல்லம் என்ற சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர் தற்பொழுது கர்ப்பமாக இருந்து வருகிறார்.
நடிகை அனு கடந்த 2017ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் கர்ப்பமாகியுள்ளார் எனவே விரைவில் இந்த தம்பதியினர்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் அனுக்கு வளைகாப்பு நடைபெற்ற முடிந்துள்ளது.
மேலும் இந்த வளைகாப்பு கனவுக்கு ஸ்பெஷல் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அவரது கணவர் மட்டுமே இந்த வளையகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்துள்ளார் மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் மிகவும் சிம்பிளாக நடத்து முடித்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியான அழகிய புகைப்படங்களை அணு தனுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவர் தனது வளைகாப்பு சிம்பிளாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென நானும் விக்கியும் விரும்பினோம் விக்கி தான் எனக்கு நலங்கு செய்தார் அந்த தருணம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது அப்பொழுது புது மணப்பெண் போல் என் முகம் சிவந்தது என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அணுவின் வளைகாப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.