ப்ரோமோஷன் என்ற பெயரில் தனுஷ், விஜய்யை கலாய்க்கும் பிரபல OTT நிறுவனம்.? நீங்களே இப்படி பண்ணலாமா..

dhanush-and-vijay
dhanush-and-vijay

தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக இருந்து வந்துள்ளது ஏன் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கூட கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. பீஸ்ட் திரைப்படம்  ஒரு மாதம் கழித்து சன் நெக்ஸ்ட் மற்றும் netflix OTT தளத்தில் வெளியாகியது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தை பிரமோஷன் செய்வதற்கு பதிலாக படத்தை வச்சு கலாய்த்தது பீஸ்ட் பாவங்கள், அரபிக் குத்து பரிதாபங்கள் என அடுத்தடுத்த காமெடியான வீடியோவை வெளியிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அதிக காசை கொடுத்து அந்த படத்தை வாங்கி புரமோஷன் என்ற பெயரில் படத்தையும் விஜயையும் இப்படி அநியாயத்திற்கு நீங்கள் கலாய்த்து உள்ளீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்தனர்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான  GRAY MAN திரைப்படம் அடுத்து வெளிவர இருக்கிறது இந்த படத்தையும் netflix நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தையும் ஒரு ப்ரோமோஷன் என்ற பெயரில் வச்சி செய்துள்ளது.

தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகினாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற தவறியது இந்த படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என கூறுவார் இந்த பெயரை தற்பொழுது netflix  தனுஷின் GRAY MAN படத்திற்கு பயன்படுத்தி உள்ளது.

தனுஷ் இருக்கும் ஒரு புதிய போட்டோவை வெளியிட்டு அதில் THE GRAY MAN பரம்பரையில் தனுஷ் என கூறிப்பிட்டு கலாய்ச்சி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் விஜய் படத்தை தான் வச்சி செய்றீங்க அடுத்தது தனுசையும் விட்டு வைக்கவில்லையா என கூறி கமெண்ட்  அடித்து வருகின்றனர்.