தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் இதற்கு முன்பு காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் மீண்டும் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் இன்று 700 திரையரங்கிற்கு மேல் வெளியாகி உள்ளது.
நானே ஒருவன் திரைப்படத்திற்கு பெரிதாக எந்த ஒரு பிரமோஷனும் செய்யவில்லை இருந்தாலும் தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடியுள்ளார்கள் அதன் வீடியோ மற்றும் புகைப்படத்தை நமது இணையதளத்தில் பார்த்திருப்போம். நானே வருவேன் திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். தனுசுக்கு ஜோடியாக இந்துஜா, எல்லிஅவுரம் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.
பொதுவாக தனுஷ் திரைப்படத்திற்கு நான்கு மணி காட்சிகள் இருக்கும் ஆனால் இந்த முறை தனுஷ் திரைப்படத்திற்கு நான்கு மணி காட்சிகள் இல்லை 8:00 மணி காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. அதேபோல் இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் ரசிகர்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்றது அந்த லிஸ்டில் நானே வருவேன் திரைப்படமும் இணையும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
நானே வருவேன் திரைப்படத்தை கலைபுலி எஸ் தானு தான் தயாரித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலைபுலி எஸ் தானு அவர்களிடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக ஒளிபரப்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த கலைபுலி எஸ் தானு ஒன்பது நாட்கள் விடுமுறை என்பதால் அதனை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை.
அதனால் ரிலீஸில் எந்த மாற்றமும் கிடையாது எனக் கூறியிருந்தால் அவர் கூறியது போல இன்று பிரமாண்டமாக நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு பிரபல ott நிறுவனமான அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதற்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.