நடிகர் அஜித்குமார் இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த படமான “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதற்காக அஜித் உடல் எடையை குறைத்து வருகிறார் அதன் புகைப்படங்கள் கூட வெளிவருகின்றன.
இந்த நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படம் பில்லா. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம்,, ஆதித்யா, ஜான் விஜய் என பல திரைபட்டாளங்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இயக்குனர் விஷ்ணுவர்தன் முயற்சி செய்தாராம் ஆனால் ஆரம்பத்தில் அந்த நடிகர் பில்லா படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார் காரணம் என்னவென்று பார்த்தால் அஜித் தான் என கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் அஜித் பற்றி பல தவறான செய்திகள் வந்தது இதை கேள்விப்பட்ட அந்த நடிகர் நான் அஜித் படத்தில் நடிக்க மாட்டேன் எனக் கூறி பில்லா படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
ஆனால் படக்குழு எப்படியோ அந்த நடிகரை சம்மதிக்க வைத்து விட்டது. நடிகர் வேறு யாருமல்ல நடிகர் ரகுமான் தான் ஒரு வழியாக ரகுமான் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் அந்த சமயத்தில் அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது அப்பொழுது தான் தெரிஞ்சு அஜித் ஒரு நல்ல மனிதர் என்றும், எல்லோரிடமும் சரிக்கு சமமாக பழகக்கூடியவர் என்று அஜித்தை பார்த்து புரிந்து கொண்டாராம் அதுமட்டுமின்றி பெற்றோர்கள் சரியான விதத்தில் வளர்த்திருந்ததால் மட்டும் தான்.
அஜித் மாதிரியான நல்ல குணாதிசயம் கொண்ட மனிதரை இந்த உலகில் பார்க்க முடியும் அவருடன் நடித்தது எனது பாக்கியம் என ரகுமான் கூறியிருந்தார். அஜித் உடன் நடித்தவர்கள் பலரும் அஜித்தை பற்றி புகழ்ந்துதான் பேசியிருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் அவரை தப்பான விதத்தில் பார்ப்பது மட்டுமல்லாமல் அதை ஒரு பெரிய விஷயமாக பரப்பியும் வருகின்றனர்.