நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மைக்கலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான் அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது 61-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்த அடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடிகை இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் மீண்டும் ஒருமுறை இணைய இயக்குனர் விஷ்ணுவர்தன் கதையுடன் ரெடி காத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது.
இயக்குனர் விஷ்ணுவர்தன் குறும்பு என்னும் படத்தை இயக்கிய இயக்குனர் அவதாரம் எடுத்தார் அதன் பின் இவர் இயக்கிய பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம் என அனைத்து படங்களும் வெற்றி படங்கள் தான். குறிப்பாக அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்கள் இவருக்கும் சரி, அஜித்துக்கும் சரி மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து ரசிகர்கள் அஜித்தும் – விஷ்ணுவர்தனம் மீண்டும் ஒரு முறை இணைந்து இன்னொரு படத்தை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் அஜித்தை வைத்து படம் பண்ண விஷ்ணுவர்தனுக்கு ஆசைதான் ஆனால் இருவரும் சேர வாய்ப்பு இல்லாமலேயே போனது இருப்பினும் விடாமல் இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்திற்காக பார்த்து பார்த்து ராஜராஜ சோழனின் வரலாற்றை கதையை மையமாக வைத்து ஒரு கதையை உருவாகி இருந்தார்.
அதில் அஜித்தை நடிக்க வைக்க விஷ்ணுவர்தன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். ஆனால் அந்த கதை விவாத்துடன் அப்படியே நின்று போனதாம் அந்த படம் உருவாகி இருந்தால் நிச்சயம் பொன்னியின் செல்வன் கதையை அப்படியே தழுவி இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்பொழுது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.