Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி.
படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் வராததால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் படம் உருவாகுமா அல்லது இல்லையா என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லைககா நிறுவனத்தின் தலைவர். சுபாஷ்காரனிடம் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்தார் அவர் சொன்னது என்னவென்றால் அஜித்தின் விடாமுயற்சி படம் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்ட் வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கும் என கூறினார் அதற்கு ஏற்றார் போலவே அஜித்தும் உடனடியாக சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ் அர்ஜுன் என பல திரைப்படங்கள் நடிக்க போவதாகவும் கிசுகிக்கபடுகின்றன. இந்த சூழ்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை சந்தித்து உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படிப்பட்ட மீட்டிங் ஆக இருக்கும் என்பது தெரியவில்லை..
பலரும் கூறுவது ஏகே 63 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அஜித் நடிப்பது குறித்த சந்திப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர். முதலில் அஜித்தின் 62 வது படத்தை இவர் தான் எடுத்திருக்க வேண்டும் அது மிஸ் ஆகிவிட்டது. தற்போது நடக்கின்ற சூழ்நிலைகளை எல்லாம் பார்த்தால் அஜித் 63 ல் இந்த ஜோடி இணைவது உறுதி என்பது தெரிகிறது.