தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஹச் வினோத் இயக்குகிறார் பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி ஷங்கர், அஜய், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது இந்த படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
அந்த வகையில் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்கப் போவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவன் விக்னேஷ் சிவன் என்பது தெரிய வந்துள்ளது. எப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில இயக்குனர்கள் அஜித்திடம் கதையை எல்லாம் சொல்லிவிட்டேன் அடுத்து அஜித்தை வைத்து படம் பண்ண போகிறேன் என பல இயக்குனர்கள் சொல்லி திரிந்து வருகின்றனர். ஆனால் அது உண்மையா என்பது மட்டும் தெரியவில்லை.
இது போல தான் தற்பொழுது பிஎஸ் மித்ரன் இரும்புத்திரை படத்தை தொடர்ந்து அஜித்திடம் ஒரு கதையை கூறியுள்ளார் அது அஜித்திற்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதே தவிர அந்த படத்தில் இணைவதாக எதுவும் சொல்லப்படவில்லை ஆனால் பிஎஸ் மித்ரன் ஒரு தொலைக்காட்சியில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் கடுப்பான அஜித் இனி மித்ரனுடன் சேரக்கூடாது என முடிவெடுக்க அவரை கழட்டி விட்டாராம். பெரிய நடிகரின் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் தேவையில்லாமல் வெளிப்படையாக சொல்லி வாய்ப்பை தற்போது இழந்து உள்ளார் பி எஸ் மித்திரன் இவர் கார்த்தியை வைத்து சர்தார் என்னும் படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.