விஜய் வைத்து படம் பண்ண பல வருடம் காத்துக் கொண்டிருக்கும் பிரபல இயக்குனர்.! தலை அசைப்பாரா தளபதி..

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் இப்பொழுது தெலுங்கில் இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இரண்டு கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்படிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படத்தின் படப்பிடிப்பை ரகசியமாக நடத்தினாலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் படகுழுவும் சரி விஜய்யும் சரி ரொம்ப அப்சாட்டில் தான் இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக சொல்லிவிட்டது இதனால் ரசிகர்களும் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் வைத்து படம் பண்ண வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்  அது பற்றி தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.

தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் மகிழ்திருமேனி இவர் இதுவரை டெடி, தடம், தடையறத் தாக்க, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களை இயக்கி வெற்றிகொண்டுள்ளார். இவர் விஜயை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் இதுவரை நடக்கவில்லை.

விஜய் வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாம் தளபதி 67 படத்திற்கு பிறகு விஜய் வைத்து  இயக்குனர் மகிழ்திருமேனி  கண்டிப்பாக ஒரு திரைப்படம் பண்ணுவேன் கூறியுள்ளார்  விஜய் அவர்கள் வாய்ப்பு கொடுத்தால் வித்தியாசமான கதைகளாக இருக்கும் இதுவரை விஜய் அவர்கள் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் கூறினார்.