அஜித்திற்கு தரமான ஒரு கதையை வைத்துக் கொண்டு 8 வருடங்களாக காத்திருக்கும் பிரபல இயக்குனர்.! இந்த கூட்டனி ஒன்னு சேர்ந்தா பிரம்மாண்ட ஹிட் இருக்கும் போல…

ajith
ajith

பிரபல இயக்குனர் ஒருவருக்கு நடிகர் அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 8 வருடங்களாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரைக்கும் அந்த இயக்குனருக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது அப்படி வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடக்கூடிய படமாக நான் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் உடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் ஏகே 62 படத்தை இயக்க இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம் அஜித். இதை ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று பிரபல இயக்குனர் ஒற்றை காலில் நிற்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளிக்கும்போது அஜித்தை வைத்து எப்போது படத்தை இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு முறையாவது படத்தை இயக்க வேண்டும் என்று எட்டு வருடங்களாக காத்திருப்பதாகவும் இதற்காக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் இதுவரைக்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் பிரேமம் படத்தை பார்த்துவிட்டு அஜித் சார் நவீன் பாலிக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார் ஆனால் எனக்கு ஒரு முறை கூட போன் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார் ஆனால் ஒரு முறையாவது படம் எடுத்தால் அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடும் அளவிற்கு தரமான மாஸ் படத்தை கொடுப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறி இருக்கிறார்.