முன்னணி இயக்குனர்களின் ஒருவரான லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான் போன்ற படங்கள் ஹிட் அடைந்ததை தொடர்ந்து தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தி வாரியர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் ஹீரோவாக ராம் பொத்தேனி மற்றும் ஹீரோயினாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த தி புல்லட் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது இதைத்தொடர்ந்து இந்த படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க லிங்குசாமி பல நடிகர்களுக்கு கதை கூறி வருகிறாராம். அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவிற்கும் ஒரு கதையை கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்தன. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் எனும் படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படி அடுத்தடுத்து பல படங்களில் சூர்யா கமிட் ஆகியுள்ளதால் இயக்குனர் லிங்குசாமியுடன் கதையை மட்டும் கேட்டு இருந்த நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் வெளிவந்த வாரியர் திரைப்படம் வெற்றி பெறவில்லை என்பதால் நடிகர் சூர்யா இவருடன் இணைந்தால் நம்ம படமும் பிளாப் ஆகி விடுமோ என்ற பயத்தில் செய்தியாளர்களிடம் ரகசியமாய் லிங்குசாமிடம் நான் கதையே கேட்கவில்லை என கூறி வருகிறாராம்.