இது வீடா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா.! பிரபல நடிகை வாங்கிய வீட்டை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

madhuri-dixit

இந்தியாவில் கொடி கட்டி பறந்து வரும் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மாதுரி தீட்சித். இவர் தற்போது ஒரு பிரமாண்ட அடுக்கு மாடி கிடியிருப்பை அதாவது 52 வது மாடியை 48 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வயது மீறிய ஒரு நடிகை என்றால் நடிகை மாதுரியாக தான் இருக்க முடியும். சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு பிசியான நடிகை என்றே சொல்லலாம்.

இவர் தற்போது வரையிலும் ரசிகர்களின் கனவு கனியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய திரைப்படங்களில் அதிகம் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர் என்று சொல்லலாம். எப்போதும் பிசியாக இருந்து வரும் நடிகை மாதுரி தற்போது மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

இந்தக் குடியிருப்பு கிட்டத்தட்ட 5,384 சதுர அடி பரப்பளவு 7 கார் பார்க்கிங் கொண்டு மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் பாலிவுட் நடிகையான மாதுரி இந்த அடுக்குமாடி குடியிருப்பை 48 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

madhuri dixit
madhuri dixit

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இந்த வீட்டை பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளம், கால்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம்,கிளப் போன்ற பல வசதிகள் உள்ளதாக விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

madhuri dixit

இங்குதான் நடிகை மாதுரி பிளாட் வாங்கி இருப்பதாக பிரபல ஆங்கில இணையதள செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அடுக்குமடி குடியிருப்பில் வாங்கும் போது நடிகை மாதுரிக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது ஒரு பெண் சொந்தமாக வீடு வாங்கினால்  முத்திரை வரியில் ஒரு சதவீதம் சலுகை வழங்கப்படும். ஆகையால் மாநில வருவாய் துறை நடிகை மாதுரிக்கு ஒரு சதவீதம் சலுகை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.