இணையத்தில் வந்த ஆ***ன புகைப்படத்தால் அதிர்ச்சியான பிரபல நடிகை.! சைபர் கிரைம் போலீசாரிடம் பரபரப்பு புகார்…

actress
actress

ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரவீனா. இவர் தற்போது தன்னுடைய புகைப்படங்களை வைத்து ஆ***க மார்பிங் செய்து அந்த புகைப்படத்தை போலியான சமுக வலைதளத்தில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

தற்போது சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜா ராணி என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரவீனா. இவர் மலையாள சினிமாவில் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்திலும் நடித்துள்ளார் நடிகை பிரவீனா.

சீரியல்கள் மட்டும் இல்லாமல் இவர் சில திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரவீனா கடந்த ஆண்டு தன்னுடைய புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து  ஆ***ன புகைப்படமாக இணையத்தில் வெளியிடுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் ஒன்றை கொடுத்து இருந்தார்.

அவர் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் டெல்லியில் ஒரு நபரை கைது செய்தனர் பின்னர் அந்த நபர் ஜாமினில் வெளிய வந்தார் இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரவீனா சைபர் கிரைம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் தன்னுடைய புகைப்படத்தையும் தன்னுடைய தங்கை புகைப்படத்தையும் மகள் புகைப்படத்தையும் வைத்து மார்பிங் செய்து ஆ****க புகைப்படத்தை ஷேர் செய்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இவருடைய இந்த பரபரப்பு புகார் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.