தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கார்த்திக். பெரும்பாலான இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முக்கியமாக இவர் கிராமத்து பின்னணி இருக்கும் கதையில் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட்டாகி வருகிறது அந்த வகையில் இவர் தனது முதல் திரைப்படமான பருத்திவீரன் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.
இதன் மூலம் நிறைய கிராமத்து கதைய அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடத்து வருகிறார் அந்த வகையில் கொம்பன் இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கொம்பன் திரைப்படத்தின் இயக்குனரான முத்தையாவுடன் இணைந்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் சமீபத்தில் இத்திரைப்படத்தின் விழா மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இத்திரைப்படத்தில் சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். மேலும் விருமன் திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் கார்த்திக்கு விருது கொடுக்கவில்லை என்றால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை என ஓவராக புகழ்ந்துள்ளார். அதாவது விருமன் படத்தில் வடிவுக்கரசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் இருந்தே பல சினிமா நடிகர்களை இவருக்கு தெரியும்.
அந்த வகையில் சிவகுமாருடன் வடிவரசி நிறைய படங்களிலும் நடித்துள்ளார் இந்நிலையில் சமீப ஊடக பேச்சு ஒன்றில் வடிவுகரசி சிவகுமாரின் வாரிசுகள் சொக்கத்தங்கம் என பாராட்டியுள்ளார் ஏனென்றால் எல்லா சினிமா வாரிசுகளும் இதுபோன்று மரியாதையுடன் நடந்து கொள்ள தெரியாது அப்படி தெரிந்தாலும் அவர்கள் பெரிதாக மரியாதை தர மாட்டார்கள் ஆனால் சிவக்குமார் கொடுத்து வைத்தவர்.
அவருடைய இரண்டு மகன்களுமே நல்ல பண்புடையவர்களாக இருந்து வருகிறார்கள் மேலும் விருமன் படத்தில் மிகப்பெரிய டயலாக்குகளை கார்த்தி சிங்கிள் சார்ட்டில் நடித்து அசத்தியிருந்தார் கேமராவுக்கு பின்னால் கார்த்திக்கு நடிப்பை பார்த்து நான் மிகவும் அசந்து விட்டேன் என வியந்து கூறியுள்ளார் வடிவுக்கரசி.
இதனைத் தொடர்ந்து மேலும் சூர்யாவுக்கு தேசிய விருதை கிடைத்த நிலையில் அதனைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது சூர்யாவுக்கு முன்பே விருது கிடைக்க வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் கார்த்திக்கு விருது கொடுக்கவில்லை என்றால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை என்று வடிவுக்கரசி கூறிவுள்ளார்.இதனை பலர் ஓவர் சீனாக இருக்கிறது என்று கூறினாலும் என்னதான் இருந்தாலும் அவர் சினிமாவில் மூத்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.