தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன நடிகர்கள் என்றால் அது சிவாஜி தான் இவர் பிரபலமான நமது நடிகருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மட்டும் இல்லாமல் இவருடைய திரைப்படங்கள் வெளிவந்தால் போதும் தியேட்டர்களில் கூட்டங்கள் அலை முழுவது வழக்கம் தான்.
நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் 70 காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்தார் அப்பொழுது அவர் சிவகாமியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் இந்த திரைப்படத்தை சீவி ராஜேந்திரன் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் வாணிஸ்ரீ லதா போன்றவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
அந்த திரைப்படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஆனால் அவர் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தாமதம் ஆன பிறகு தான் படபிடிப்பு தளத்தில் கலந்து கொண்டார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் ஏற்கனவே ஊட்டியில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததன் காரணமாக தான் இந்தப் படப்பிடிப்பு இடத்திற்கு சரியான நேரத்தில் வர முடியவில்லை.
இதனால் ரயில் வண்டியை தவறவிட்ட நமது நடிகை அதன் பிறகு வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு சூட்டிங்ஸ் பாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார் ஆனால் இவர் முன்னதாகவே படக்குவினரிடம் தகவல் தெரிவித்து இருந்தார் ஆனாலும் பட குழுவினர்கள் அவரை மன்னிப்பு கேட்கும் படி வற்புறுத்தினார்கள்.
இதற்கு முக்கிய காரணம் நமது நடிகை தாமதமாக படபிடிப்புக்கு வந்ததால் சிவாஜி மிகவும் கோபமாக இருந்திருந்தார் இதனால் மன்னிப்பு கேட்க சொல்லி பலரும் கூறிய நிலையில் நான் தாமதமான காரணத்தை ஏற்கனவே சிவாஜி சாரிடம் சொல்லிவிட்டேன் அப்படி இருக்கும் பொழுது நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வாதாடியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்
உடனே நான் எந்த தப்பும் செய்யவில்லை என்னால் மன்னிப்பு கேட்க முடியாது வேணும் ஆனால் படத்தை விட்டு விலகி விடுகிறேன் என நமது நடிகை எடுத்த முடிவு பலரையும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளது இதனால் சிவாஜியை அவமானப்படுத்தி விட்டதாக அப்போது திரை உலகில் பலரும் பேசப்பட்டது மட்டும் இல்லாமல் பட வாய்ப்புக்காக பணிந்து போகாமல் தைரியமாக இருந்த நமது நடிகையை பலரும் பாராட்டி வந்தார்கள்.