இயக்குனர் ஷங்கர் பார்த்த வேலையால் கதறி அழுத பிரபல நடிகை.? பல வருடம் கழித்து வெளிவந்த செய்தி

genilia

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இதுவரை எடுத்துள்ள திரைப்படங்கள் அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் கடைசியாக எடுத்த 2.0 படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை எடுத்து வந்தார். சில பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் இருந்ததால் உடனே ஷங்கர் தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்னும் படத்தை எடுக்க ஆரம்பித்தார்.

இதற்கு இடையில் இந்தியன்2 பிரச்சனை முடிந்து ஷூட்டிங் ஆரம்பித்தது. இயக்குனர் ஷங்கர் வேறு வழி இன்றி ஒரு பக்கம் கேம் சேஞ்சர் படத்தை எடுக்க மறுபக்கம் இந்தியன் 2 படத்தையும் எடுத்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகி வருகிறது.

படத்தில் கமலுடன் கைகோர்த்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, தம்பி ராமையா என பல திரை பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சித்தார்த்.. இந்தியன் 2 படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்னுடைய குரு நாதர் கமலுடன் நடிப்பது அதைவிட சந்தோஷம் என  பேசினார்.

அதனைத் தொடர்ந்து சங்கர் குறித்தும் பேசி உள்ளார் சித்தார்த் அவர் சொன்னது.. பாய்ஸ் திரைப்படத்தில்  என்னுடன் சேர்ந்து நடிகை ஜெனிலியா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.. நடிகை ஜெனிலியாவுக்கு தமிழ் சரியாக வராததால் கொடுக்கும் வசனங்களை நான் தமிழில் அவருக்கு சொல்லுவேன்..

boys
boys

ஒரு நாள் ஷங்கர் இரண்டு பக்க வசனங்களை கொடுத்து விட்டார் இதை பார்த்த உடனேயே ஜெனிலியா அழத் தொடங்கிவிட்டார் பிறகு அவருக்கு அதை தமிழில் சொல்லிக்கொடுத்தேன் பிறகு அவர் நடித்தார் என கூறினார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.