அதுக்கெல்லாம் இடமே கிடையாது.? அஜித்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பிரபல நடிகை

Ajith
Ajith

Ajith : நடிகர் அஜித்குமார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென கோடான கோடி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். ரசிகர்களையும் தாண்டி இவருக்கு சினிமா பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருந்து வருகின்றனர் அதனால் அஜித பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணமே இருக்கின்றன.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிகர் ரெடியாக உள்ளார். மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்க உள்ளது. விடாமுயற்சி ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருக்கிறது என்ன தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. த்ரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட அஜித் தற்பொழுது புதிய விஷயங்களை கையில் எடுத்துள்ளார் பைக் பயணம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஏற்ற வகையில் பைக் நிறுவனம் ஒன்றை தொடங்கி கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில நிறுவனங்களையும் அவர் தொடங்க இருப்பதாக பேச்சுக்கள் எழுத வந்த முன்னமே இருக்கின்றன இந்த நிலையில் அஜித்தை பற்றி பிரபல நடிகை கஸ்தூரி பழைய பேட்டி ஒன்றில் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.

அட்ஜஸ்மென்ட்,  நடிகைகள் படும் வேதனை போன்றவற்றைப் பற்றி பேசியிருந்தார் அதில் சினிமாவில் தண்ணி அடிக்காமல் இருக்கும் நடிகர்கள் சில பேர் தான் என்றும் எனக்கு தெரிந்த நடிகர் அஜித்தும், நடிகர் அபிஷேக் பச்சனும் தான் தண்ணி அடிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார் இந்த விஷயத்தை நடிகர் அஜித ரசிகர்கள் இணையதள பக்கங்களில் வருகின்றனர்.