ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் எம்ஜிஆர். இவர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படத்தில் நடித்து முதலில் அறிமுகமானார் அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என மிகப் பெரிய ஹிட் படங்களை கொடுத்து..
தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார் திரை உலகில் நடிப்பதோடு தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் இயக்குனராகவும் வெற்றி கண்டவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் அரசியலில் களம் இறங்கி வெற்றி கண்டார் பல தடவை முதலமைச்சராக இருந்து மக்களுக்கு பல உதவிகளை செய்து அசத்தினார்.
இப்படி ஓடிய எம்ஜிஆரை பார்த்தாலே பலரும் பயப்படுவார்கள் குறிப்பாக சினிமா உலகில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் எல்லாம் சொல்லவே வேண்டாம் பயந்து நடுங்குவார்கள் அப்படிப்பட்ட எம் ஜி ஆரை ஒரே ஒரு நடிகை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுவாராம் அந்த நடிகை நீங்கள் நினைப்பது போல் ஜெயலலிதா கிடையாது வேறு ஒருவர்..
அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல.. எம்ஜிஆரை உரிமையோடு அழைக்கும் தகுதி உடையவர் பானுமதி தான் இவரும் எம்ஜிஆர் ஆரம்பத்திலிருந்து நல்ல நட்பு இருந்திருக்கிறது மேலும் பானுமதி நடிகை மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர் மற்றும் முதல் தயாரிப்பாளர் என்ற பெருமையை இவருக்கு தான் வந்து சேரும்.. அதனால் என்னவோ நடிகை பானுமதி சற்று கருவமுடன் தான் இருப்பார் அவரைப் பார்த்தாலே சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் அனைவரும் அமைதியாக விடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு கெத்தை மெயின்டைன் பண்ணி வைத்திருந்தார்.