தமிழ் சின்னத்துறையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகை சந்திரா லட்சுமன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு அந்தஸ்து இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் மேலும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் அடுத்தடுத்து இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு Tosh Christy என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தார் நடிகை சந்திரா லக்ஷ்மன். மேலும் அவர் தன்னுடைய கணவருடன் போட்டோ சூட் நடத்திருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.
இந்நிலையில் பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொள்வதற்கு தாமதப்படுத்துவார்கள் அதே போல் நடிகை சந்திரா லக்ஷ்மனுக்கு தற்பொழுது 40 வயதாகிய உள்ளது. தொடர்ந்து சின்ன திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் தாமதமாக தான் திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் 40 வயதில் தாயாகியுள்ள நடிகை சந்திரா லக்ஷ்மணனுக்கு நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சோசியல் மீடியாவின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் நடிகை சந்திராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அவர் தனது குழந்தையின் கையை தன் கையின் மேல் வைத்து புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை சந்திரா இன்னும் சில மாதங்கள் கழித்து விரைவில் சின்னத்திரையில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை சந்திரா சீரியல்களில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த மனசெல்லாம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாக என்பது குறிப்பிடத்தக்கது.