உடம்பை அழகாக வைத்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு மட்டும் பல லட்சம் செலவு செய்யும் பிரபல நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்

actress

சினிமா உலகில் ஒரு நடிகை ஜொலிக்க முக்கிய காரணம் திறமை மற்றும் அவரது அழகு தான்.. ரொம்ப முக்கியம் அழகு.. அது குறைந்துவிட்டால் பட வாய்ப்பு அனைத்தும் குறைந்து விடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை இதனால் நடிகைகள் முதலில் தன்னை அழகாக வைத்துக் கொள்ள காசு செலவு பண்ணுகிறார்கள்.

ஒரு சிலர் வெளிப்படையாக சொல்லுகின்றனர் ஒரு சிலர் சொல்ல மாட்டார்கள் இந்த நிலையில் பிரபல நடிகை டாப்ஸி  உடலை மெயின்டைன் பண்ண ஒரு மாதம் எவ்வளவு செலவு செய்கிறேன் என்பது குறித்து வெளிப்படையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். டாப்ஸி முதலில் தெலுங்கு படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார் அதனைத் தொடர்ந்து இவருக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்தது இதனால் எந்த ஒரு இடத்திலும் நிலையாக இல்லாமல் அங்கும் இங்கும் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

இருந்தாலும் நாலா பக்கமும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருப்பதால் மார்க்கெட் குறையாமல் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை டாப்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது  உடலை மெயின்டனன்ஸ் செய்ய அதிகம் செலவு செய்வதாக கூறினார். மேலும் பேசிய அவர் தனது உணவை முடிவு செய்யும் dietician – க்கு மட்டும் ஒரு மாதம் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்வதாக டாப்ஸி கூறுகிறார்.

இந்த விஷயத்தைப் பற்றி என் அப்பாவிடம் கூறினால் என்னை திட்டுவார் இது வீண் செலவு எனக் கூறுவார் இது வீண் செலவு இல்லை அத்தியாவசியமான ஒன்று என டாப்ஸி தெரிவித்தார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

tapsee
tapsee
tapsee